
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மோகன் ஜி. இவர் திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் திருப்பதி கோவிலில் வழங்கப்படும் பிரசாத லட்டுவில் மாட்டிறைச்சி மற்றும் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக நேற்று மத்திய அரசின் ஆய்வகம் சோதனை செய்த அறிக்கையை நேற்று தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டு இருந்தது. இதற்கு தற்போது மோகன் ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எப்படி மனசாட்சியே இல்லாமல் இத்தனை கோடி மக்களின் நம்பிக்கையில் விளையாடியுள்ளீர்கள். வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள். கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் திருப்பதியில் லட்டுவில் மாட்டிறைச்சி கலக்கப்பட்டதாக வந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.