தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் அரசு பள்ளி இருப்பின் அதே பகுதியில் தனியார் பள்ளிக்கு RTE இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. RTE க்கு அதிக தொகை செலவழிப்பதை கட்டுப்படுத்தவும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அமல்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது.