செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைத்துறை நசுங்கி, நாசமாயிருச்சு. கூட்டு நிறுவனங்கள்  வந்துட்டதனால…  திரையரங்குகள் மொத்தமாக ஒருத்தர்,  ரெண்டு பேர்  கிட்ட இருக்கு. அப்படிங்கும் போது,  படங்கள் முன்னாடி மாதிரி 100 நாள்,  50 நாள் ஓடி வசூல்  எடுக்க முடியாது. ஒரு வாரத்துக்குள்ள பெரும் முதலீடு. அந்த முதலீடு போட்டு எடுக்கணும்  அப்படிங்கும் போது…  அதிகபட்ச்ச காட்சிகளை ஓட்டி  தான் எடுக்க முடியும்.

அதனால உலகமே கார்ப்பரேட் மையமா ஆகிட்டபோது,  அத போய் பேசி என்ன இருக்கு?  இப்போ அந்த காட்சியை தடுக்கிறதால என்ன ஆகிரும் ?  விஜய் படம். இதுக்கு முன்னாடி விஜய் படத்துக்கு நெருக்கடி தரவே இல்லையா? வாரிசு குடுத்திகளா ?  மாஸ்டருக்கு கொடுத்தீங்களா ?  வாரிசுக்கு இடையூறு பண்ணுவீங்க… ஏன்னா…  நீங்க வெளியிடல அந்த படத்தை வாங்கி….

உங்களுக்கு காசு வராது… அதனால் நெருக்கடி கொடுக்குறீங்க….  அதிகாரம் உங்ககிட்ட இருக்கு அப்படின்னு…  இது எல்லாம் கொடுமை தான். நான் அதை வெறுக்கிறேன் என்கிறேன். ஒரு நாளைக்கு தீபாவளி,  பொங்கல் அன்னைக்கு 600 கோடிக்கு குடிக்கிறாங்க. ஒரு நாள் ஒரு பட வசூல் 34 கோடி. பொழுதுபோக்குக்கு….

கேளிக்கைக்கு இவ்வளவு முதலீடு செய்ய காசு  இருக்கும்போது,  மக்களுக்கு எதுக்கு இலவசம் ஏன் என்று தான் நானும் கேட்கிறேன்… கொடுக்காத என்கிறேன்…  ஒரே நாளைக்கு 600 கோடி குடிக்கிறாங்க…  அரசே அறிவிக்கிறது 600 கோடி என்றால் ? அவன்  800 கோடி,  900 கோடி கூட குடிச்சி இருக்கலாம். அப்போ எப்படி நீங்க அனுமதிக்கிறீங்க?