தனி நபர்களுக்கு சேமிப்பு மற்றும் நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் LIC பீமா ரத்னா சேமிப்பு திட்டம். இந்த தனி நபர் ஆயுள் காப்பீட்டு திட்டம் கார்ப்பரேட் முகவர்கள், முகவர்கள், காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள்(IMF) மற்றும் LIC-ன் பொதுவான சேவை மையங்கள் (CSC) வாயிலாக கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு (அ) வருடந்தோறும் என நெகிழ்வான பிரீமியம் செலுத்திக்கொள்ளலாம். பிரீமியங்களுக்கு 30 தினங்கள் சலுகைக்காலம் வழங்கப்படுகிறது. மாதாந்திர பிரீமியங்களுக்கு 15 தினங்கள் சலுகைக் காலம் வழங்கப்படுகிறது.

வருடாந்திர கொடுப்பனவுகளுக்கு 2 சதவீத தள்ளுபடி மற்றும் அரையாண்டு கொடுப்பனவுகளுக்கு 1% தள்ளுபடியும் இத்திட்டத்தில் இருக்கிறது. இப்பாலிசியின் முதிர்வுகாலம் 10, 15, 20, 25 வருடங்கள் ஆகும். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் நபர் தங்களுக்கு உகந்த ப்ரீமியம் காலத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். 23 லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும் எனில் குறைந்தபட்சம் 20 வருடங்கள் தினசரி டெபாசிட் செய்யவேண்டும்.

முதலீட்டுக்காக நீங்கள் LICல் உள்ள பீமா ரத்னா திட்டத்தை தேர்ந்தெடுத்து 20 வருடகால வரம்பில் பணத்தை முதலீடு செய்கிறீர்கள் எனில் உங்களுக்கு முதிர்வு காலத்துக்கு பின் 23 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதற்கு நீங்கள் தினசரி 138 ரூபாய் வீதம் வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். 20 வருடங்களில் ரூ.10 லட்சம் சேமித்திருப்பீர்கள். திட்டத்தின் முதர்ச்சியில் 23 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். நல்ல சேமிப்பு திட்டத்தினை தேடிக்கொண்டிருப்போர் இத்திட்டத்தை பரிசீலிக்கலாம்.