தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார்,  மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே..  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற பொழுது… 

தேர்தல் அறிக்கை கொடுத்த போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவோம் என்று தான் மக்கள் புரிந்து கொண்டார்கள், நாங்களும் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறோம்.  பேரவை தலைவர் அவர்களே… பொங்கல் பரிசு தொகுப்பு  திட்டம் என்று மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் அறிவிச்ச பொழுது 2 கோடியே 18 லட்ச குடும்பங்களுக்கும் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமே கொடுத்தோம் என பேசினார்.

அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதரர்களுக்கும் வழங்கினோம், மகளிர் உரிமை தொகை அப்படி வழங்கவில்லை என சுட்டி காட்டியதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், அவர் சொல்லுறது ஆண்டிற்கு ஒரு முறை பொங்கல். இது மாதம் மாதம். அதுனாலதான் தகுதி உள்ளவங்களுக்கு மட்டும் தான் கொடுக்கணும்னு முடிவு எடுத்து இருக்கிறோம். அதுவும் ரேஷன் கார்டு உள்ள அத்தனை பேருக்கும் கொடுத்தோம். அதையும்,  இதையும் சம்மந்தபடுத்தி பேச வேண்டிய அவசியம் இல்ல.

இப்போ கால தாமதத்தை குறிப்பிட்டு பேசுறீங்க.  நாங்க ஆட்சிக்கு வந்தப்ப நிதி நிலைமை சரியாக இருந்து இருந்தால் அடுத்த நிமிடம் கொடுத்து இருப்போம். நிதி நிலைமை அவ்ளோ மோசமா இருந்தது. அதுவும் உங்களுக்கு தெரியும். அதுக்கு டேட்டா எடுத்தோம்; யாரு தகுதியானவர்கள் ? என்று கண்டுபிடிக்கிறதுக்கு டைம் ஆச்சி. இவ்ளோ பணிகளை செஞ்சி,  செப்டம்பர் மாதம் சொன்ன டேட்ல கொடுத்து இருக்கிறோம், அதான் உண்மை என தெரிவித்தார்.