
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை காவல்துறையால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை மதுராவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சைலேஷ் பாண்டே தலைமையிலான நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட என்கவுண்டர் ஆகும். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, ஆசாத் என்ற குற்றவாளி ரூபாய் 1 லட்சம் பரிசு தொகை அறிவித்து தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார்.இவர் சாய்மர் கும்பலின் தலைவராகவும் இருந்துள்ளார். உத்திர பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் 32 வழக்குக்கு மேல் கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஆவார்.
இந்த நிலையில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நடவடிக்கைகளில் நீண்ட நாட்கள் தேடப்பட்டு வந்த ஆசாத் கொலை குற்றவாளி காவல்துறையினரால் துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இந்த நடவடிக்கை மற்றும் அவரது மரணம் காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது என டிஜிபி தெரிவித்தார்.