
திருப்பதி கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்வதற்காக ஆந்திராவின் முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா ரவளியுடன் வந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப் போவதாக சில சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்புகின்றனர். ஆனால் நான் எந்த காரணத்தை கொண்டும் கட்சி மாற மாட்டேன்.
சிலர் கட்சியில் இருந்து விலகுவதால் ஜெகனுக்கோ, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கோ எந்த ஒரு இழப்பும் இல்லை. ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கல்லூரி கழிவறையில் ரகசிய கேமராக்கள், பெண்கள் மீதான தாக்குதல், ராகிங் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என்று கூறினார்.