இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இலங்கை வீரர் காமிந்து மெண்டிஸ் கொல்கத்தா பேட்டிங் செய்தபோது 13வது ஓவரை வீசினார்.

 

 

அப்போது களத்தில் கொல்கத்தா அணியின் வலது கை ஆட்டக்காரரான ரகுவன்சி மற்றும் இடது கை ஆட்டக்காரரான வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களத்தில் இருந்தனர். அப்போது அந்த ஓவரை வீசிய மெண்டிஸ் ரகுவன்சிக்கு வலது கையால், வெங்கடேஷ் ஐயருக்கு இடது கையாலும் வீசினார். இவர் வீசிய பந்தில் அரை சதம் கடந்த ரகுவன்சி விக்கெட் இழந்தார். மேலும் ஒரே ஓவரில் அவர் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.