ஜப்பானில் கடந்த கோடை காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்க அச்சுறுத்தலின் காரணமாக மக்கள் அதிக அளவில் அரிசியை கையிருப்பு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்தின் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சந்தையில் அரிசி பற்றாக்குறை உருவாகி விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் “நான் ஒருபோதும் அரிசி வாங்கியதில்லை” என்று விவசாய அமைச்சர் டக்கு எட்டோ பேசிய உரையாடலால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் ஷின்ஜிரோ கொய்சுமி என்பவர் புதிய விவசாய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் ஜப்பானின் விவசாய விநியோக சங்கலியை சீர்திருத்துவதாக உறுதியளித்துள்ளார். தற்போது ஜப்பானில் 5 கிலோ அரிசி ரூ. 35 (5000 யென்) வரை விற்கப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் பாரம்பரிய முறையில் கூட்டுறவுகளுடன் வேலை செய்வதால் சந்தை துல்லியமாக கணிக்கப்படுவதில்லை என்றும், சில வணிகர்கள் அரிசியை பதுக்கி விலையை உயர்த்தி இருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதைத்தொடர்ந்து சில பெரிய விற்பனை நிறுவனங்கள் உள்ளூர் அரிசிக்கு பதிலாக அமெரிக்காவில் விளைந்த கால்ரோஸ் என்ற ஜபோனிகா வகையை விற்பனை செய்ய தொடங்கியுள்ளன. இதனால் ஜப்பானில் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் விவசாயத்திற்கு திரும்புவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அரிசியின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.