கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியிடம் 90 சென்ட் நிலத்தை வாங்கி அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது முதல்நிலை வருவாய் ஆய்வாளரான பாலு என்பவர் பட்டா மாற்றம் செய்து தர 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மணி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுப்பிரமணி பாலுவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலுவை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.