பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

அதில் ” என்னை பொறுத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும் என்றும் வார்த்தைகளை கடுமையாக பயன்படுத்தக்கூடாது. சகோதரி விஜயதாரணி அவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை அண்ணாமலை வெளிப்படுத்தி உள்ளார். இது இயல்புதான் பாஜகவில் அனைவருக்கும் பதவி கிடைக்கும். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகலாமே தவிர காலம் கடக்காது. அவர் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் துரைமுருகன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது திமுகவில் பெரும் புயலை உருவாக்கியுள்ளது. கட்சியில் எவ்வளவு சீனியர் அண்ணன் துரைமுருகன். கட்சியில் கடுமையாக உழைத்த அவர் உதயநிதிக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டிய நிலை” என்றும் அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபோது. அதற்கு அவர் “மாநில தலைவரும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் அது மேடையில் மட்டும் முடிவு செய்வது இல்லை” என்றும் அவர் பதிலளித்துள்ளார்.