உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றதிலிருந்து அரசியலமைப்பின் சட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் அதிரடி நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளார்.

அதாவது ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின பிரிவினருக்கு 15%, மற்றும் பழங்குடியினர் பிரிவிற்கு 7.5% பணியிடங்கள் இட ஒதுக்கீடு நடைமுறையை நீதிபதி பி.ஆர். கவாய் அமல்படுத்தியுள்ளார்.