தினமும் ரயிலில் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். விலை குறைவாக இருப்பதாலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடிவதாலும் ஏராளமானோர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஆனால் ரயில் ரத்து செய்யப்படுவது போன்ற விபரங்கள் கடைசி நேரத்தில் தெரிய வருவதால் பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதை சமாளிக்க இந்திய ரயில்வே ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்திய ரயில்வேயின் தேசிய ரயில் விசாரணை அமைப்பு NTES என்ற செயலி மூலம் நீங்கள் ரயில் ரத்து செய்யப்படுதல், மாற்றுப்பாதைகள், குறுகிய நிறுத்தங்கள் உள்ளிட்ட விபரங்களை பார்க்கலாம்.

இந்த செயலியை நீங்கள் கூகுளில் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும் அல்லது ஆன்லைனில் NTES என்ற வலைதளத்திலும் பார்க்க முடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் முகப்பு பகுதியில் Spot Your Train, Live Station, Train Schedule, Train Between Trains, மற்றும் Train Exception Info உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களைக் காண்பீர்கள். ஒரே கிளிக்கில் உங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களையும் இதன் மூலம் பார்க்க முடியும்.