டெல்லி அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி.

2023 ஐபிஎல் தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மாலை 3:30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் பாப் டூபிளெஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் களம் களமிறங்கினர். இருவரும் நன்றாக இன்னிங்க்ஸை தொடங்கி அதிரடியாக ஆடி வந்த நிலையில் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் (22 ரன்கள்) மார்ஷ் வீசிய 5வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேற்றினார்.

இருப்பினும் மற்றொரு துவக்கவீரர் விராட் கோலி லோம்ரோர் உடன் கைகோர்த்து சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அதன் பின் கோலி (34 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 50 ரன்கள்) அவுட்டானார். பின் லோம்ரோர் 26 ரன்கள் சேர்த்து அவுட் ஆக, அடுத்து வந்த ஹர்ஷல் படேல் 6 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனிடையே களமிறங்கி அதிரடியாக ஆடி வந்த மேக்ஸ்வெல் 24(14) ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய 15வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 2வது பந்தில்  அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து  டக் அவுட் ஆகி வெளிறினார்.

பெங்களூரு அணி 14.2 ஓவரில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது சாபாஷ் அகமது (20 ரன்கள் ) மற்றும் அனுஜ் ராவத் (15 ரன்கள்) இருவரும் கடைசியில் விக்கெட் விடாமல் பொறுப்பாக ஆடியதால் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல்மற்றும் லலித் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.. தற்போது டெல்லி அணி 6 ஓவர் முடிவில் 32 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி ஆடி வருகிறது.