
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இன்று ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
CSK Special Fan Jersey being sold at Chinnaswamy Stadium 🤣🤣 #RCBvsCSK #ViratKohli #CSK #StopTheRain #ShubmanGill pic.twitter.com/VDy7sCG3NO
— Yash (@YashCricOG) May 3, 2025
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் பெங்களூர் அணி பேட்டிங் செய்கிறது. இந்நிலையில் சின்னசாமி ஸ்டேடியத்தில் தற்போது சென்னை அணியை கேலி செய்யும் விதமாக ஜெர்சி விற்பனை செய்யப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 2016 மற்றும் 2017 ஆகிய சீசன்களில் மேட்ச் பிக்சிங் காரணமாக சென்னை அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதனை குறிப்பிட்டு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஜெயில் உடை போன்ற ஜெர்சி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சென்னை ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.