
சென்னையில் உள்ள ராயப்பேட்டை ஓஎம்ஜி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்த போது அண்ணாமலை தவழ்ந்து காலில் விழுந்து பதவியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி. பண்பாடுமிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிப்பு எந்த அதிகாரமும் கிடையாது என கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அப்படி பார்க்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள்.
நாங்கள் சைக்காலஜி படித்து இருப்பதால் மனநல மருத்துவர் பற்றி தெரியும். மதுரையிலேயே உங்களுக்கு ஒரு பைசா கட்டணம் இல்லாமல் சேர்த்து விட்டு அந்த புண்ணியத்தை ஏற்று க் கொள்கிறோம். பாஜக கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த கட்சியுடைய விலாசத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு அக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தனது முகவரியை விலாசத்தை முன்னிலைப்படுத்தி சுயநலத்தோடு எடுத்து வரும் அத்தனை முயற்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் அப்பட்டமாக தெரிந்தது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுகளவு கூட உழைப்பை தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் இந்த காலத்தில் பகல் கனவு காண்கின்றனர். இதனையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.