நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டுள்ளது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே பணியாளர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது அருந்துதல் (அ) வேறு ஏதேனும் சட்டவிரோத நடத்தையில் ஈடுபடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் IRCTCல் இருந்து கடும் தண்டனைகளை எதிர்கொள்வார்கள்.

பயணிகள் தங்களது இருக்கைகள், பெட்டிகள் (அ) கோச்சில் தொலைபேசியில் உரையாடும் போது (அ) சக பயணிகளுடன் பேசும்போது உரத்த தொனியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பயணிகள் ஹெட்ஃபோன்கள் இன்றி அதிக சத்தத்தில் பாட்டு கேட்ககூடாது. இரவு விளக்குகள் தவிர்த்து பயணிகள் யாரும் இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை எரிய அனுமதிக்கமாட்டார்கள். இரவு விளக்கு தவிர்த்து மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்கவேண்டும்.