
இந்தியாவில் உள்ளூர் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதாவது ரஞ்சி கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. இதில் ரோஹித், ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர். சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்கள் நடந்தது. அதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் விளையாடவில்லை. இதன் காரணமாக அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து உடல் தகுதி பிரச்சனை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியது. அதன்படி உள்ளூர் போட்டிகளில் முன்னாள் வீரர்கள் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் விராட் கோலி கடந்த 23ம் தேதி நடைபெற்ற போட்டியில் அவரது கழுத்து வலி காரணமாக இடம்பெறாததால், அவர் மீது சிலர் குறை கூறினர். இந்நிலையில் டெல்லி அணியின் அடுத்த லீக் ஆட்டத்தில் விளையாட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை டெல்லி அணி நிர்வாகமும் உறுதியளித்துள்ளது.