நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் ‘ரெய்னா இந்தியன் ரெஸ்டாரன்ட்’ என்ற இந்திய உணவகத்தை சுரேஷ் ரெய்னா நிறுவியுள்ளார்..

கிரிக்கெட் நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா 2005-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். அதிரடி வீரராக அறியப்பட்ட ரெய்னா 3 வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணிக்காக 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி 7,988 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 176 போட்டிகளில் விளையாடி 4,687 ரன்கள் குவித்துள்ளார்.

2018ல் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினார். தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 சாம்பியன்ஷிப்களில் 4-ஐ வென்றபோது ரெய்னா ஒரு முக்கிய வீரராக இருந்தார். 2021 சீசனுக்கு பிறகு ரெய்னாவுக்கு சென்னை அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது அவர் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான இந்தியா லெஜண்ட்ஸ், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் ‘ரெய்னா இந்தியன் ரெஸ்டாரன்ட்’ என்ற இந்திய உணவகத்தை சுரேஷ் ரெய்னா நிறுவியுள்ளார். இந்த தகவலை சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ரெய்னா ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ரெய்னா இந்திய உணவகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

பல ஆண்டுகளாக, உணவின் மீது எனக்குள்ள அன்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் மற்றும் எனது சமையல் சாகசங்களை நேரில் பார்த்திருக்கிறீர்கள், இப்போது, ​​இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐரோப்பாவின் மையப்பகுதிக்கு நேராக மிகவும் உண்மையான மற்றும் உண்மையான சுவைகளை கொண்டு வரும் பணியில் இருக்கிறேன். நீங்கள் நிச்சயமாக இங்கே சுவையான உணவு கிடைக்கும். உற்சாகமூட்டும் புதுப்பிப்புகளுக்கும், எங்களின் வாயில் ஊறும் படைப்புகளின் ஸ்னீக் பீக்குகளுக்கும், ரெய்னா இந்தியன் உணவகத்தின் பிரமாண்டமான வெளியீட்டு விழாவிற்கும் காத்திருங்கள்! இந்த சாகசத்தில் என்னுடன் சேருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இவருக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..