அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த இயக்கம்75 ஆண்டு இயக்கம்,  50 ஆண்டு இயக்கத்திற்கு இணையாக…  ஏன் போட்டியாக ? தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் இந்த இயக்கத்திற்கு கிளைகள் இல்லாத ஊரே இல்லை என்கின்ற அளவிற்கு இயக்கத்தை வலுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். டிடிவி என்கின்ற பெயரை பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர்கள் நீங்கள். அது போல நம்முடைய வெற்றி சின்னமாகிய குக்கரை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.

இப்பொழுது கூட கோவை மாநகரில் வடக்கு மாவட்ட சார்பாக பூத்துக்கு ரெண்டு பேரை… அந்தந்த பூத்  பகுதியிலே வாழ்கின்ற  நன்கு அறிந்தவர்களை ஒவ்வொரு பூத்திலும் ரெண்டு பேர் நியமிக்க வேண்டும் என்றேன். அவர்களுக்கு சிறப்பாக இந்த வேலையை கொடுத்திருந்தேன். அதில் 80 சதவீதம் வேலை முடித்து விட்டார்கள். இதே வேலையை அன்புச் சகோதரர் சுகுமாரிடம்,  அப்பாதுரை அவரிடம் சொல்லத்தான் இங்கே வந்திருக்கிறேன்.

உங்களது தொகுதிகளிலே டிசம்பர் நான் வரும்போது பூத்துக்கு குறைந்தது இரண்டு பேர்…  நல்ல பூத்து கமிட்டி உறுப்பினர்களை நீங்கள்  தேர்தெடுத்து நியமனம் செய்ய வேண்டும். அவர்களை அனைவரையும் ஜனவரி மாதத்திலேயே ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தின் சார்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களை நான் சந்திக்கின்ற மாநாடு நடைபெறும் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதற்குப் பிறகு அவர்களை வைத்துக்கொண்டு கழக நிர்வாகிகள்… பகுதி செயலாளர்… ஒன்றிய செயலாளர்கள்.. வார்டு செயலாளர்கள்… கிளைச் செயலாளர்… ஊராட்சி செயலாளர்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பூத்திலும்,  தேவைக்கேற்ப தேர்தல் நேரத்திலே பூத்து கமிட்டி உறுப்பினர்களை நாம் மீண்டும் நியமனம் செய்து கொள்ளலாம்.

பூத்துக்கு 2 பேர் சிறந்த உறுப்பினர்கள். சிறப்பாக செயல்படுபவர்களை  நீங்கள் நியமிக்கணும்.  ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலிலும்,  சட்டமன்றத்  தேர்தலிலும் நீங்கள் பூத்துக் கமிட்டிகளை அமைத்தவர்கள் தான்.  இருந்தாலும் இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு சிறப்பு கவனம் செலுத்தி நீங்கள் பூத்து கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளத் தான் இந்த கூட்டம் இங்கு கூட்டப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.