கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், உலகநாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் நடிக்கும் புதிய படத்தின் மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
‘வீரம் உண்டு வெற்றி உண்டு’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிரட்டலான தோற்றத்தில் சிவகார்த்திகேயன் இருக்கும் இந்தப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி வருகிறது. அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஒரு வலுவான கதைக் களத்துடன் சிவகார்த்திகேயன் களம் இறங்குவதால், இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘சேயோன்’ படத்தின் மூலம் எஸ்கே-வின் மார்க்கெட் அடுத்த லெவலுக்குச் செல்லும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
