தமிழர் திருநாளான பொங்கல் தமிழக மக்கள் அனைவராலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தமிழர் பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொது மக்களுக்கு பொங்கல் பண்டிகை ஒட்டி நியாய விலை கடைகளில் இலவச சர்க்கரை, கரும்பு, அரிசி முதலிய பொருட்கள் அடங்கிய பரிசுகளும். மேலும் இலவச வேஷ்டி, சேலையும்  தமிழக அரசு சார்பில்  பொங்கல் பரிசாக வழங்கபடுகிறது .

இந்த நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு கொண்டாட உள்ள பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கும் பரிசு பொருள்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1 கிலோ சர்க்கரை, 1கிலோ பச்சரிசி மற்றும் 1 முழு கரும்பு மற்றும் வேஷ்டி, சேலை ஆகிய  பொருள்கள் வழங்கப்பட உள்ளது.