தமிழ்நாட்டில் இந்து திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். திமுக அரசு இந்தி திணிப்புக்கு கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இந்தி திணிப்பின் மற்றொரு வடிவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தயிர் பாக்கெட்டுகளில் “தாஹி”என்ற பெயரை பெரிதாக குறிப்பிடும்படி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பால் கூட்டுறவு சங்கங்களுக்கு FSSAI (உணவு பாதுகாப்பு ஆணையம்) உத்தரவிட்டுள்ளது. மேலும் நீண்ட காலங்களாக இந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.