புதுச்சேரியில் உள்ள கனுவா பேட்டை பகுதியில் செந்தில்குமரன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். அதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் செந்தில்குமரன் நேற்று இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் செந்தில் குமரன் மீது 2 வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அதன் பிறகு செந்தில்குமரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று செந்தில்குமரனின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையை தீவிர படுத்த வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் செந்தில்குமரன் பாஜகவில் நித்தியானந்தம் என்பவரை வளர்த்துவிட்டு கட்சி பொறுப்பை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் திடீரென நித்யானந்தம் மற்றும் செந்தில்குமாருக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் நித்தியானந்தத்தின் பெயரை செந்தில்குமார் சேர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நித்தியானந்தம் 7 பேரை தூண்டி செந்தில்குமாரை கொலை செய்ய வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் செந்தில்குமரனை கொலை செய்த நித்தியானந்தம், சிவசங்கர், ராஜா, வெங்கடேஷ், பிரதாப், கார்த்திகேயன், விக்னேஷ் ஆகிய 7 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.