விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் தற்போது 5 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் விலகினார்.

அவர் ஒரு தொகுப்பாளினி தான் காரணம் என்று கூறிய நிலையில் பிரியங்கா தான் அந்த சீசனில் கலந்து கொண்ட தொகுப்பாளினி என்பதால் அவர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இது பிரியங்கா மற்றும் மணிமேகலை தொடர்பான விவகாரம் இணையதளத்தில் சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது நடிகை பவானி ரெட்டி இந்த பிரச்சனையை குறித்து கூறியுள்ளார்.

அதாவது மணிமேகலைக்கு தன் வேலை போய்விடும் என்ற பயத்தில் தான் பிரியங்கா மீது பழி போடுகிறார் எனவும் பிரியங்கா எந்த தப்பை செய்யவில்லை எனவும் கூறியுள்ளார் மேலும் உண்மை வெல்லும் எனவும் கூறியுள்ளார்.