
பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 26ம் தேதியில் தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினமும் மக்களவையில் அரசியலமைப்பு மீதான சிறப்புகள் இடம் பெற்றன. ஏனென்றால் அரசியலில் அமைப்பை ஏற்று 75 வருடம் ஆகிவிட்டது. இதனால் இந்த உரைகள் இடம் பெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என வரிசையாக மோடி காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டினார். ரத்த ருசி கண்ட காங்கிரஸ், அரசியல் அமைப்பை மீண்டும் காயப்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, மோடி ஆற்றிய 110 நிமிட உரை, பள்ளியில் கணித வகுப்புகளில் இருப்பது போல மிகவும் சலிப்பாக இருந்தது என்று அவர் கூறினார். மோடி ஒன்றும் புதிதாக பேசவில்லை, எங்களுக்கு சலிப்புதான் ஏற்பட்டது. என்னை இந்த கூட்டம் பல ஆண்டுகளுக்கு பின்னால் எடுத்துச் சென்றது. நான் அந்த காலத்தில் கணித வகுப்புகளில் உட்கார்ந்ததைப் போல உணர்ந்தேன். நட்டா ஜியும் கையை தடவிக் கொண்டிருந்தார், ஆனால் மோடி அதை பார்த்தபோது அவர் கவனமாக கேட்பது போல் பாவனை செய்தார். அமித்ஷா கையை தலையில் வைத்து உட்கார்ந்து விட்டார். பியூஷ் கோயல் ஜி தூங்கிவிட்டார். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. அவர் ஏதாவது புதிதாக பேசுவார் என்று நினைத்தேன் என்று பிரியங்கா தெரிவித்தார்.