தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பிரபலமான நடிகராகவும் இருப்பவர் அஜித். இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். நடிகர் கவின் மற்றும் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் ஆகியோர் அஜித் குமாருடன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்ப புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் பெரும் வைரலாக பரவியது.

இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேர்காணலில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் நான் அஜித் சாரை விமான நிலையத்தில் ஒருமுறை பார்த்து பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் நான் யார் என்றே தெரியாமல் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் அங்கு வந்த என் மனைவி நான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்று கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜித் சார் என்னை தனியாக அழைத்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். முன்னணி ஹீரோவாக இருக்கும் அவர் சிறிதும் பெருமிதம் கொள்ளாமல் என்னிடம் மன்னிப்பு கேட்டது என்னை நெகிழச் செய்தது. நான் பேசிய ஒரே காரணத்திற்காக என்னை மதித்து பேசினார். அத்தகைய நல்ல மனிதன் அஜித் சார் எனவும் கூறியுள்ளார்