நடப்பு ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன,.31 ஆம் தேதி துவங்கி ஏப்,.6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய தினமான ஜன,.31ம் தேதி நாளை பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பங்குதாரர்கள் பட்ஜெட் தொடர்பான தங்களது பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளின் பட்டியலை முன்வைத்துள்ளனர் . சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் அமைப்பான ஐசிஏஐ தன் பரிந்துரைகளின் பட்டியலை நிதியமைச்சரிடம் சமர்ப்பித்து உள்ளது. அதாவது, பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீட்டு வரம்பை தற்போது உள்ள ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்க நிதியமைச்சருக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் நிறுவனம் பரிந்துரைத்து இருக்கிறது.

அதோடு ஒருவர் 20 வருடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 லட்சத்தை பிபிஎப்-ல் முதலீடு செய்வதன் மூலம், 20 ஆண்டுகளுக்கு பின் முதலீட்டாளர் ரூ.1.33 கோடி வருமானத்தை பெறுவர். இப்போது பிபிஎப்-க்கு 7.1% வட்டியை அரசாங்கம் செலுத்துகிறது. பிபிஎப்-ல் கிடைக்கும் வட்டிக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது.