இந்தியாவில் வாகனங்களை ஓட்டுவதற்கு லைசன்ஸ் மிக முக்கியமான ஒன்று. கார், பைக், ஸ்கூட்டர் போன்ற அனைத்து விதமான வாகனங்களையும் ஓட்டுவதற்கு லைசன்ஸ் மிக முக்கியமான ஒன்றாக திகழும் நிலையில் வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் போது அவர்களிடம் லைசென்ஸை காண்பிக்க வேண்டும். இந்நிலையில் ஓட்டுனர் உரிமத்தை நாம் இனி கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது மத்திய அரசு முக்கியமான ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்காக டிஜி லாக்கர் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இதில் நாம் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து போலீசார் லைசென்ஸ் கேட்டால்  நம்முடைய செல்போனில் இருக்கும் ஓட்டுனர் உரிமத்தின் சாஃப்ட் காப்பியை காண்பித்தால் மட்டும் போதுமானது. நீங்கள் செல்போனில் ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்கும் போது போக்குவரத்து போலீசார் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மேலும் ஆவணங்களை கையில் எடுத்து செல்லும்போது பாதுகாப்பான சூழ்நிலை நிலவாத நிலையில் தற்போது செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்வதன் மூலம் நமக்கு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய வசதியும் கிடைத்துள்ளது.