பாலிவுட் திரையுலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நடிகர் விபு கே. ராகவே(37). இவர் நிஷா அவர் உஸ்கே கசின்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார்.

இவர் தனது 35 வயதிலேயே அரிய வகையான பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த 4ஆம் நிலை புற்றுநோயால் கடந்த  3 ஆண்டுகள் போராடி வந்த அவர் நேற்றிரவு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இவர் தனது இறப்பிற்கு முன்பு வரை இன்ஸ்டாகிராமில் தன்னுடைய உடல்நலம் குறித்த தகவல்கள், நோய் குறித்த விழிப்புணர்வு பற்றிய விஷயங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

அவரது இறப்பு குறித்து அவரது தோழியும், தொலைக்காட்சி பிரபலமான சௌமியா டாண்டன் தனது இணையதள பக்கத்தில் மிகுந்த வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது இறப்பிற்கு திரை, தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர். மேலும் சௌமியா தனது பதிவில் மறைந்த நடிகரின் இறுதி ஊர்வலம் குறித்த விவரங்களையும் பகிர்ந்திருந்தார்.