நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  பலமுறை நீங்கள் கெட்டது சொல்ல நினைக்கும் போது உண்மை வெளிபட்டுவிடும். இலங்கையை அனுமான் எரிக்கவில்லை,  ராவணனின் ஆணவம் தான் அழித்தது. இது மிகவும் சரியானது. இந்த மக்களும் ராமரை போன்றவர்கள்தான். அதனால்தான் 400-இல்  இருந்து 40 ஆகி இருக்கிறார்கள்.

மரியாதைக்குரிய தலைவர் அவர்களே…. உண்மை என்னவென்றால்,  நாட்டின் மக்கள் இரண்டு முறை… 30 ஆண்டுகளுக்கு பிறகு  நாட்டின் பெரும்பான்மை ஆட்சியை கொடுத்துள்ளார்கள். அதனால் ஒரு ஏழையின் மகன் இங்கே எப்படி உக்கார்ந்து இருக்கின்றான். உங்களுக்கு இங்கு என்ன உரிமை இருக்கின்றதோ, நீங்கள் உங்கள் குடும்ப ஆட்சியை நடத்த விரும்புனீர்கள்.

உங்கள் பரிவாரத்தில் இல்லாத…. உங்கள் குடும்பத்தில் இல்லாத  ஏழையின் மகன் இங்கே அமர்ந்து ஆட்சி செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு உறக்கம் வரவில்லை. 2024லும் இது உங்களுக்கு தூக்கத்தை தராது.

இவர்களது பிறந்த நாளுக்கு விமானத்தில் கேக் வெட்டப்பட்டது. இன்று அந்த விமானத்தில் ஏழைகளுக்கான தடுப்பூசி கொண்டு செல்லப்படுகின்றது.  ஒரு காலத்தில் உடைகளை வெளுப்பதற்காக… உடைகள்  விமானத்தில் சென்று கொண்டிருந்தது. இன்று ஹவாய் செப்பல் அணியும் ஏழை விமானத்தில் சென்று கொண்டிருக்கிறான். விடுமுறையை அனுபவிக்க…

ஆனந்தமாக  கழிக்க…  பாரத கப்பல்படையின் படகுகள் – கப்பல்கள்  அழைத்து வரப்பட்டது. ஆனால் இப்போது வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர இந்த கப்பல்கள் – விமானங்கள்  பயன்படுகிறன என தெரிவித்தார்.