நாட்டு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். தமிழ்நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுடைய பிரச்சினையை தடுப்பதற்காக மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தை 2017 ஆம் வருடம் மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிக்கவும் நோய்களை தடுக்கவும் அரசு தரப்பில் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த தொகையானது பெண்களுடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். முழுமையாக இந்த தொகை வழங்கப்படாது. முதல் தகவணையாக 1000, இரண்டாவது தவணையாக 2000, மூன்றாவது தவணையாக 2000 ரூபாய், கடைசி தவணையாக குழந்தை பிறந்த பின் ரூ 1000 என பிரித்து கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பினால் wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற அதிகாரப்பூர்வை இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அங்கன்வாடி மையத்தை அணுகலாம்.