முதலமைச்சர் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது இல்லத்தில்  முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசி இருக்கிறார்.

பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் நேற்றைக்கு தீர்ப்பு வந்த போது முதலமைச்சர் தூத்துக்குடியில் இருந்தாங்க. அதனால உடனடியாக அவரால் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு தான் முதலமைச்சர் சென்னை திரும்பினார். பொன்முடி முன்னாள் அமைச்சராக இருக்கிறார். பொன்முடி நீதிமன்றதால் தகுதி இழப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் திமுகவின் மூத்த நிர்வாகியாக இருக்கின்றார். தமிழக முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலினுக்கும்,  பொன்முடிக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால்,  இரண்டு பேருக்கும் 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்கு வந்தவர்கள். நீண்ட நெடிய காலமாக நண்பர்களாக இருந்தார்கள்.

இந்த தீர்ப்பு வந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் கட்சி தார்மிக ரீதியாக உங்களுடன் பின்னால் நிற்கும் என்பதை ஏற்கனவே கட்சி சார்பாக நேற்று பொன்முடி இல்லத்திற்கு குறிப்பாக…. அ சட்ட துறை அமைச்சர் ரகுபதி, திமுக உடைய முக்கிய நிர்வாகிகள் ஆர்.எஸ்பாரதி போன்றவர்களெல்லாம்  சென்று பேசினார்கள்.  தார்மீக ரீதியாக நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று சொல்லி இருந்தார்கள்.

கட்சியின்  மூத்த துணை பொதுச்செயலாளர். மாநில அளவிலான பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது போன்ற ஒரு தீர்ப்பு வந்திருக்கக்கூடிய நிலையில் முதலமைச்சருடன் பேசியுள்ளார். என்ஆர் இளங்கோ திமுகவின் வழக்கறிஞர் தான் இதில் வாதாடுகிறார். சட்டரீதியாகவும்,  அரசியல் ரீதியாகவும் தொடர்ச்சியாக உங்களுடன் நாங்கள் இருப்போம் என்பதை தான் முதலமைச்சர் சார்பாக சொன்னதாக தெரிகிறது.

கிட்டத்தட்ட ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் அவருடைய தகுதி இழப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழக அமைச்சரவையில் தன்னுடைய இலாகாவை  இழந்திருக்கிறார். அந்த அளவில் தன்னுடைய சகாவை முதலமைச்சர் சந்தித்து,  நீங்கள் கவலை அடைய வேண்டாம். தொடர்ந்து கட்சி உங்களுக்கு பின்னால் நிற்கும் என்பதை வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது.