
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூரில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். செல்வகுமார் கடந்து இரண்டாம் தேதி சின்ன பள்ளம் செக்போஸ்டில் இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாழைக்காய் லோடு ஏற்றி சென்ற வேன் டிரைவரிடம் குடிபோதையில் செல்வகுமார் பணம் கேட்டு மிரட்டியதாக புகார்கள் வந்தது.
அது தொடர்பான வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரல் ஆனதும் இதனால் டிஎஸ்பி சந்திரசேகரன் விசாரணை அடிப்படையில் செல்வகுமாரை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வகுமார் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று செல்வகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கு இடையே அவரது உறவினர்கள் அந்த வீடியோவை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாபேட்டை மேட்டூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி அளித்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.