
- நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் மற்றும் 2-ஆம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாகியது. அதோடு இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
ருத்ரன் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ருத்ரன் படத்தில் இடம்பெற்றிருக்கும் “பாடாத பாட்டெல்லாம்” பாடலை இன்று (பிப்,.11) படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
#Rudhran first single A Evergreen Classical Remix Song #PaadathaPatellam Out Now🔥🕺
Watch Here – https://t.co/iqeVQpu2PTSong Composed By @dharankumar_c 🎵
Singer : @Nithyashreeoff 🎤@offl_Lawrence @kathiresan_offl @gvprakash @priya_Bshankar pic.twitter.com/o3LjBbqUHj— Five Star Creations LLP (@5starcreationss) February 11, 2023