மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் இருபதாவது தவணை  பணமானது ஜூன் மாதத்தில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்த திட்டமானது தொடங்கப்பட்டதிலிருந்து வழக்கமாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் தவணை பணம் வழங்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் 19 ஆவது தவணை வழங்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இன்னும் வரவில்லை. எனவே விவசாயிகள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.