
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 18 வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதே சமயம் விவசாயிகள் இ கேஒய்சி அப்டேட் செய்வது போன்ற பணிகள் கடந்த ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் அக்டோபர் மாதத்தில் 18வது தவணை 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.