சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனா தலைமை தாங்கியுள்ளார். இதில் சின்னமசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனாவை சந்தித்து மனு கொடுத்தனர். அவர்களுடன் கபடி வீரர்கள் சிலரும் கோப்பைகளுடன் வந்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற கபடி போட்டிகளில் எங்கள் ஊரைச் சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற்றனர். அங்கு பெற்ற கோப்பைகளை மாரியம்மன் கோவில் வைத்து வழிபட சென்றபோது சிலர் 20 குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்திருப்பதாக கூறி வழிபட அனுமதிக்கவில்லை. மேலும் அவர்கள் எங்களை தாக்க முயற்சி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.