இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030க்குள் 8000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சிக்கிம் வர்த்தக மற்றும் தொழில்துறைக்கான உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது நாட்டில் இயற்கை சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2.28 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்து 8276 கோடியாக வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக மத்திய அரசின் சார்பில் அதிக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய இயற்கை சார்ந்த பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை பரிசோதனை ஆய்வகம் ஒன்றை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த மைல் கல்லை அடைவது மாநிலம் வளர்ச்சி அடைய உதவுவதுடன் சுற்றுலாத் துறையும் வளரும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.