மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு இந்த மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு தவிர்த்து மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு நிவாரணம் தருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கர்நாடக முதலமைச்ச்ர பசவராஜ் பொம்மை கூறியதாவது, 7-வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்த அரசு தயாராகி வருவதாகவும், அதற்காக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

7-வது ஊதியக்குழுவின் படி ஊழியர்களின் சம்பள மாற்றம் பற்றிய அறிக்கையை முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழு தாக்கல் செய்யும் என அவர் கூறினார். அதோடு 2023-24 நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு, கூடுதல் தொகை துணை பட்ஜெட்டில் வழங்கப்படும் எனவும் 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை புதிய நிதியாண்டில் இருந்தே அமல்படுத்தப்படும் எனவும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். ஜன,.1 ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படும் என நினைத்த ஊழியர்களுக்கு இது மிகப் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.