பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக ராக்கி சாவந்த் இருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விளங்கக்கூடிய ராக்கி, அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளிலும் சிக்கிக்கொள்கிறார். கடந்த 2019ம் வருடம் ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், சென்ற ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
அண்மையில் மைசூருவை சேர்ந்த ஆதில்கான் துரானியை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் மீது விமர்சனம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா குறித்து அவதூறான கருத்துகளை சொல்லியதாக ராக்கி மீது போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்த்துறையினர் ராக்கி சாவந்த்தை கைது செய்து உள்ளனர்.