முன்னணி நடிகரான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றது. இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் நட்சத்திரங்கள், நடிகர்கள், கலைஞர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் பங்கேற்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராம்சரண் சிறந்த ஆடை அணிந்து வந்து விழாக்களில் பங்கேற்கும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர் இவர்தான். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் தான் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் பிரத்தியேகமான ஆடை அணிவதிலும் விருப்பமுள்ளவர். இவர் கோல்டன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்பதற்காக உலக அளவில் புகழ்பெற்ற வடிவமைப்பாளரை கொண்டு ரீகல் மினிமலிஸ்ட் ஃபேஷன் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் குறிப்பிடத்தக்கது.