
சீனாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் liver ஒரு மூளைச்சாவடைந்த மனிதருக்கு மாற்றி வைத்த சம்பவம் உலகத்தையே அதிர வைத்துள்ளது. அதாவது சீனாவின் சீயான் நகரத்தில் உள்ள நான்காவது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆறு மரபணுக்கள் மாற்றப்பட்ட ஒரு சிறிய பன்றியிடமிருந்து எடுக்கப்பட்ட லிவர் மூளைச்சாவடைந்த ஒரு வயதான நபருக்கு மாற்றி வைக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது நோயாளின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பெயரில் 10 நாட்கள் கழித்து பரிசோதனை நிறைவு செய்யப்பட்டதாகவும், இது அனைத்தும் ஒழுங்கும்படி நடைமுறைப்படுத்தப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட இந்த லிவர் மிகச் சிறப்பாக செயல்பட்டது என்றும், பித்தச்சாறு வெளியிடுவது தான் முக்கியமான புரதத்தையும் உற்பத்தி செய்துள்ளதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சீயான் மருத்துவமனையின் இணை ஆய்வாளர் லின் வாங் இதனை முக்கியமான முன்னேற்றம் என புகழ்ந்துள்ளார். அதோடு இந்த ஆரம்ப கட்ட முயற்சி மனிதருக்கான முழுமையான மாற்றாக இருக்கும் பட்சத்தில் பன்றியின் உறுப்புகள் தொடர்ந்து செயல்படுமா என்பதை உறுதியாக கூற முடியாது, அதற்காக மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.