இன்றைய காலகட்டத்தில் UPI ஆனது போன் பே மற்றும் கூகுள் பே அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிலையில் இந்த ஆதிக்கத்தை குறைப்பதற்கு whatsapp தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது சர்வதேச அளவில் பணம் செலுத்தும் வசதி வாட்ஸ் அப் வழங்கி வரும் நிலையில் தற்போது whatsapp பேமெண்ட் அல்லது whatsapp பே விரைவில் பயனர்களுக்கு கூகுள் பே மற்றும் போன் பே போன்ற பிற UPI பயன்பாடுகளைப் போல சர்வதேச கட்டண வசதிகளை வழங்க உள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் வரும் நாட்களில் இந்த அம்சம் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என தெரிகிறது.