நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்ட வருகின்றன. அதனால் தற்போது பெரும்பாலான பண பரிமாற்றங்கள் ஆன்லைன் மூலமாக செய்யப்படுகின்றது. அதன்படி நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமென்ட் தளங்களில் ஒன்றான ஃபோன் பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது பயனர்களுக்கு போன் பே நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது போன் பே மூலமாக யு பி ஐ பயன்படுத்தி சர்வதேச கட்டணங்களை செலுத்திக் கொள்வதற்கான புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர்,பூட்டான் மொரிசியஸ் மற்றும் நேபாள முதலீட்ட நாடுகளில் இருக்கும் வணிகர்களுக்கு qr குறியீட்டை ஸ்கேன் செய்து யூபிஐ மூலமாக பணம் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் இன்டர்நேஷனல் பேமென்ட் லிமிடெட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலமாக சர்வதேச கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தேவை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.