ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் தகுதியான ஓய்வூதியம் பெறுபவர்கள் மே 3ம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 3, 2023 ஆகும் என தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர் அமைச்சகம் தற்போதைய தொழிலாளர்கள், முதலாளிகள் சங்கத்தின் கோரிக்கையின் படி, அத்தகைய தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதியை மே 3, 2023 வரை நீட்டிக்க மத்திய அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

தற்போது நீங்கள் EPFO ​ன் யூனிஃபைட் மெம்பர்ஸ் போர்டல் வாயிலாக மே 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள ஊழியர்கள் அருகில் உள்ள EPFO ​​அலுவலகத்திற்கு போகவேண்டும். அங்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும். இப்போது ​​EPS-க்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உங்களின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 ஆக இருப்பின், ரூ.15,000 சம்பளத்தின் அடிப்படையில் உங்களது இபிஎஸ் பங்களிப்பு ரூ.1,250 ஆகும்.