மாதம் மாதம் நம் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் விதிமுறை பற்றியும் அதன் சில விதிமுறைகள் மூலமாக பயனாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றியும் நம்மில் அநேக பேருக்கு தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு விதிமுறையையும் அதன் மூலம் pf வாடிக்கையாளர் எப்படி ஐம்பதாயிரம் ரூபாய் வரை பலன் பெற முடியும் என்றும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பணியாளர்களின் பொருளாதார எதிர்காலத்தை பாதுகாப்பதில் எம்பிளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் ஆர்கனிசேஷன் என்று சொல்லப்படும் இபிஎப்ஓ ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் பொருளாதார பிற தன்மையை உறுதி செய்ய அதன் வாடிக்கையாளர்களுக்கு முறையான ஓய்வு கால சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது இந்த நிறுவனம். அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் இருக்கக்கூடிய முறைகளில் ஒன்று தான் லோயல்டி கம் லைஃப் பெனிஃபிட். இந்த விதிமுறை மூலம் பணியாளர்கள் 50,000 வரை நேரடியாக பலனை பெற வாய்ப்புள்ளது. அந்த விதிமுறையை பற்றியும் அதனால் என்ன நிபந்தனை என்பது பற்றியும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த பலனை பெற பணி மாற்றம் ஆன பிறகும் பிஎப் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தொடர்ச்சியாக அதே இபிஎப்ஓ கணக்கை வைத்திருக்க பரிந்துரை செய்யப்படுகிறது. தொடர்ச்சியாக ஒரே அக்கவுண்டில் 20 வருடங்கள் பங்களித்த பணியாளர்கள் லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட் திட்டத்தினால் பலனடைய முடியும் என்பதே சிபிடிடி பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் அங்கீகாரமும் இருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலமாக வழக்கமான முறையில் 20 வருடங்களுக்கு பங்களிப்பு செய்யும் பணியாளர்களுக்கு கூடுதலாக 50,000 ரூபாய் பலனை அடையலாம். பெனிஃபிட் திட்டத்தின் மூலம் 5,000 வரை அடிப்படை ஊதியம் பெறும் பணியாளர்கள் 30,000 வரையிலும் அடிப்படை ஊதியம் 5001 முதல் 10,000 வரை பெறுபவர்கள் 40 ஆயிரம் ரூபாய் பலனையும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுபவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் பலனாக பெறலாம்.
ஆனால் இந்த பலனை பெறுவதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அது என்னவென்றால் பணி மாற்றம் ஆனாலும் கூட ஒரே ஈபிஎஃப்ஓ அக்கவுண்டில் தொடர்ச்சியாக பங்களிக்க வேண்டும் என்பதே. உங்களுக்கு வேலை பணி மாற்றமானால் பழைய நிறுவனத்தின் தகவல்களை தற்போதைய நிறுவனத்திடம் வழங்க வேண்டும். எளிமையான இந்த ஒரு நிபந்தனையை பின்பற்றி வந்தால் கூடுதலாக உங்களால் ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலான பலனை உங்களால் மிக சுலபமாக பெற முடியும்.