சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் இருக்கும் கம்பன் நினைவிடம் சொல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நாட்டரசன் கோட்டையில் இருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை சீரமைக்கவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, கம்பன் நினைவிட சாலை பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டமன்ற மதிப்பீட்டு குழு இந்த சாலையை பார்வையிட்டது. சாலையின் பழுது குறித்து பல்வேறு புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.