மக்களவையில் அத்து மீறி நுழைந்தவர்களை பிடித்து எம்பிக்கள் தாக்கிய வீடியோ வெளியானது..

மக்களவையில் நுழைந்து 2 பேர் முழக்கமிட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே 2 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் அத்துமீறியவர்களை எம்பிக்கள் தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த 2 பேர் மக்களவைத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற போது உடனடியாக சுதாரித்த மூன்று எம்பிக்கள் அவரை பிடித்தனர். உள்ளே இருக்கக்கூடிய அவை காவலர்கள் பிடிப்பதற்கு முன்பு எம்பிக்கள் தைரியமாக பிடித்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிவசேனா கட்சியினுடைய எம்பி ஒருவரும், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவரும், லாஸ்ட் இயர் ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சி எம்பி ஒருவரும் 2 பேரையும் பிடித்துள்ளனர்.. அவர்களுடைய அசம்பாதா வித சம்பவத்தை செய்யப் போகிறார்கள் என்று தெரிந்ததும் தைரியமாக இறங்கி 2 பேரையும் பிடித்துள்ளனர்.

பின்னர் உடனடியாக மற்ற எம்பிகள் சேர்ந்து அவர்களை அவை காவலருடன் பிடித்து அடித்து ஒப்படைக்கும் காட்சி வெளியாகிறது. மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்கள் 2 பேர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?

நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை வீசிய நபர்களால் மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். கண்ணீர் புகை வீசிய இருவரும் சர்வாதிகார ஆட்சி ஒழிக என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியுள்ளனர். சபாநாயகரை நோக்கி ஓடி வந்த நபரை சிவசேனா எம்பி அரவிந்த் உள்ளிட்டோர் மடக்கி பிடித்துள்ளார். பின் பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மக்களவையில்  சாஹர் என்பவர் கண்ணீர் புகை குப்பிகளை வீசியது தெரிந்தது. மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. நீலம், அமோல் ஷிண்டே , சாஹர் என 4 பேரை டெல்லி போலீஸ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 கட்ட சோதனையை தாண்டி நாடாளுமன்றத்திற்கு உள்ளே நுழைய முடியும் என்ற சூழ்நிலையில், பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகஎம்பிக்கள் குற்றம் சாட்டினர். நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை.. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பதவியேற்புகாக ராய்ப்பூருக்கு பிரதமர் சென்றிருந்த நிலையில், அத்துமீறல் சம்பவம் நடந்தது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைதான 2 பேரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்திலும் விசாரணையை தொடங்கினர். என்.ஐஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த வழக்கை விசாரிக்கும் என டெல்லி காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்தது.

இதனிடையே பாஜக எம்பியின் பரிந்துரை கடிதத்தை கொண்டே இருவரும் உள்ளே நுழைந்தனர் என டேனிஷ் அலி எம்பி தகவல் தெரிவித்துள்ளார். மைசூர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் கடிதத்தை காட்டி இருவரும் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சர்வாதிகாரத்தை நிறுத்து… மணிப்பூரில் பெண்கள் மீத்தேனை வன்முறையை நிறுத்து… என முழக்கமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் பாரத் மாதா கி ஜெய் வந்தே மாதரம் என முழக்கம் எழுப்பி உள்ளனர். நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல, தேசத்தில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் இது என நாடாளுமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட நீலம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் வீசப்பட்ட புகை குப்பியை ஷூ வில் மறைத்து எடுத்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கலர் பாம் புகையை சுவாசிப்பதால் பெரிய அளவில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. கலர் பாமில் சல்பர் இருக்கும் புகையை சுவாசித்தால் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். அதிக அளவிலான கலர் பாம் புகையை விசுவாசித்தால் நுரையீரலில் பிரச்சனை ஏற்படும்.  மக்களவையில் சிறிய அளவிலேயே கலர் பாம் வீசப்பட்டதால் எம்பிகளுக்கு பாதிப்பு இல்லை.

இதனிடையே ஒத்திவைக்கப்பட்ட மக்களவை களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது,  நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தலா இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடர்பாடுகளுக்கு மத்தியிலும் அவை செயல்படுவதை உறுதிப்படுத்துவது நம் பொறுப்பு. அவையில் எழுந்தது சாதாரண புகை தான், அது குறித்து அச்சப்படத் தேவையில்லை. பார்வையாளர் மாடத்தில் இருவர் நுழைந்தது குறித்து விரிவான விசாரணை நடக்கிறது. அனைவரின் கருத்தையும் பரிசீலித்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

அத்துமீறி நுழைந்தவர்களில் மனோரஞ்சன் என்பவர் மைசூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் என தெரியவந்துள்ளது. இதனிடையே மக்களவை எம்பிக்கள் சிலர் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது என தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.