கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்பவர், தன்னுடைய மனைவி டினாவுடன் சமீபத்தில் கிரஹப்பிரவேச பூஜையை நடத்தியுள்ளார். இந்த பூஜைக்காக  இந்தியாவிலிருந்து ஒரு ஹிந்து புரோகிதர் நேரில் வந்து குரிப்பட்டவிதமாக பூஜை நடத்தினார். இதில் சுபிக்ஷாவின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

பூஜையின் போது வழிபாரகர் சுபிக்ஷாவிடம் வழக்கமான கேள்விகளை எழுப்பினார். “நீங்கள் மணந்தவரா? உங்கள் கணவர் எங்கே?” என்று கேட்டபோது, சுபிக்ஷாவின் பெற்றோர் சிறிதும் தயக்கமின்றி, “எங்கள் மகள் டினாவை திருமணம் செய்திருக்கிறார்” என்று பெருமையுடன் பதிலளித்தனர்.

இந்த உருக்கமான தருணத்தை வீடியோவாக பதிவு செய்து, சுபிக்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. என் பெற்றோர் சிறிதும் தயக்கமின்றி டினாவை தங்களது மருமகளாக ஏற்றுக்கொண்டனர்,” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 7.5 லட்சம் பார்வைகளும் 27,000க்கும் அதிகமான விருப்பங்கள் பெற்றுள்ள நிலையில், பலரும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.